பாகிஸ்தானிலுள்ள இந்து கோவில் மீது தாக்குதல்; கிருஷ்ணர் சிலை உடைப்பு!

பாகிஸ்தானிலுள்ள கிப்ரோ எனும் பகுதியிலுள்ள இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த கிருஷ்ணர் சிலையும் உடைக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் வெகு விமரிசையாக நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில், பாகிஸ்தான் நாட்டிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இதனை முன்னிட்டு பக்தர்கள் பலர் விரதம் மேற்கொண்டதுடன், கோவில்களிலும் வழிபாடு செய்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சங்கார் மாவட்டத்தில் கிப்ரோ எனும் பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ணர் சிலை ஒன்று இருதுள்ளது.

இந்த கோவிலை இஸ்லாமியர்கள் சிலர் அடித்து உடைத்தது மட்டுமல்லாமல், அந்த கோயிலில் இருந்த கிருஷ்ணர் சிலையையும் உடைத்துள்ளனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் சமூக ஆர்வலர் ரஹத் ஆஸ்டின் கூறுகையில், இஸ்லாமுக்கு எதிராக பேசினாலே தவறான குற்றம் எனக் கூறி மரண தண்டனை வரை கொடுக்கப்படுகிறது. ஆனால் முஸ்லிம் அல்லாத கடவுளுக்கு எதிரான குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விட்டு விடப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal