அசோக் லேலண்ட் அதிரடி முடிவு!சென்னையில் 16 நாட்கள் வாகன உற்பத்தி நிறுத்தம்

அசோக் லேலண்ட் நிறுவனம் வாகன உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே ஆட்டோமொபைல் துறை விற்பனையில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.இதற்கு முக்கிய காரணம் பொருளாதார மந்த நிலை ஆகும்.இதற்கு பணப்புழக்கம் குறைந்தது,ஜிஎஸ்டி வரியால் வாகனங்களுக்கான விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.

இதனால்  இந்தியாவின் முன்னணி நிறுவனமான மாருதி  கார் விற்பனை குறைவை கருத்து கொண்டு செப்டம்பர் 7 மற்றும் 9-ஆம் தேதி ஹரியானாவில் உள்ள குருகிராம், மானேசரில் உள்ள ஆலைகளில் கார் உற்பத்தி நடைபெறாது என மாருதி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில்  சென்னை எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தில் 16 நாட்கள் வாகன உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.மேலும் ஓசூர் ஆலையில் 5 நாட்கள் ,ஆழ்வார் 10 நாட்கள்,பந்த்ரா 10 நாட்கள்,பட்னாகர் 18 நாட்கள் வாகன உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.