#Ashes23: ஜோ ரூட் அதிரடி சதம்..! இங்கிலாந்து அணி 393 ரன்களில் டிக்ளேர்..!

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பேஸ்டன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியிருக்கிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்துள்ளார்.

இதன்படி, இங்கிலாந்து அணியில் முதலில் ஜாக் கிராலி, பென் டக்கெட் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் பென் டக்கெட் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அவரையடுத்து களமிறங்கிய ஒல்லி போப் 31 ரன்களில் வெளியேறினார். ஆனால், சாக் கிராலி நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார்.

அதன்பின், போலண்ட் வீசிய பந்தில் ஜாக் கிராலி ஆட்டமிழக்க, ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் நிதானாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். ஒருபுறம் ஹாரி புரூக் ஆட்டமிழக்க, ஜோ ரூட் அரைசதம் கடந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்ட்ரோக்ஸ் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

அவரையடுத்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ், 78 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். பிறகு மொயின் அலி (18 ரன்கள்), ஸ்டூவர்ட் பிராட் (16 ரன்கள்) ஓரளவு ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினர். ஆனால், ஜோ ரூட் சிறப்பாக விளையாடி டெஸ்ட் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

தற்போது இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் 78 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 118 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 78 ரன்களும், ஜாக் கிராலி 61 ரன்களும் குவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், நாதன் லியோன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தற்பொழுது ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.