அப்பல்லோ மருத்துவமனை எதையோ மறைப்பதற்காக தடை கேட்டுள்ளது! – உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு!

முன்னள் முதல்வர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு  டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். அதற்கு முன்னர் வரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். இவரது மரணத்தின் மீது மர்மம் இருப்பதாக கூறி நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு விசாரணை குழுவை அமைத்து, தீவிர விசாரணை செய்து வருகிறது.

ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை குழுவிற்கு தடை கேட்டு,  அப்பல்லோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்து இருந்தது. இந்த மனுவுக்கு இன்று பதில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தரப்பு பதில் மனு அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது  என்னவென்றால், ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு அப்பல்லோ நிர்வாகம் தடை உள்ளதால், அவர்களின் கோரிக்கையில்,  ஏதோ உள்நோக்கம் இருக்கிறது எனவும்,  அவர்கள் எதையோ மறைப்பதற்காக தடை கேட்டுள்ளனர். ‘ என பதில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.