, ,

ஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டின் ஓட்டை பிரித்து 48 சவரன் நகை கொள்ளை!

By

அரியலூர் மாவட்டம் போன் பரப்பி கிராமத்தில் வசித்து வருபவர் தான் இளங்கோவன். இவர், ஓய்வுபெற்ற ஆசிரியர் அவர். இவர் மனைவி மலர்விழிக்கு கண்ணில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனை மருத்துவரிடம் காண்பிக்க இளங்கோவன் மற்றும் மலர்விழி ஆகியோரும் மருத்துவ மனைக்கு புறப்பட்டுள்னர்.

இதனால் மலர்விழி தங்கள் வீட்டில் இருக்கும் நகைகளை பீரோவில் இருந்து எடுத்து தகர பெட்டியில் பூட்டி வைத்து விட்டு சென்று விட்டனர். பின்னர் மருத்துவமனைக்கு சென்று திரும்பி பார்க்கையில் தகர பெட்டியில் இருந்த 48 சவரன் நகையும், 40 ஆயிரம் பணமும் திருடு போனது தெரியவந்துள்ளது. மேலும் வீட்டின் ஓட்டை பிரித்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து பணம் நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Dinasuvadu Media @2023