அடடே.! பொங்கல் வைக்கப் போறீங்களா.? அப்போ கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க…!

தை மாதத்தில் தைப்பொங்கலை வரவேற்கும் அற்புதமான சூழலில் நாம் அனைவரும் இருக்கிறோம். தைப்பொங்கலின் சூரிய பொங்கல் மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் சிறப்புகள் மற்றும் பொங்கல் வைக்கும் நேரம் பற்றி இப்ப பதிவில் தெரிந்து கொள்வோம்..

பொங்கல் சிறப்பு :

தைத்திருநாளை அறுவடை தினமாகவும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்க கூடிய ஒரு திருநாளாகவும் உழவர்களின் பெருமையை உலகிற்கு சொல்லும் ஒரு உன்னதமான நாளாகும்.

பொங்கல் வைக்கும் நேரம் :

இந்த வருடம் தை மாதம் அதிகாலை 5.45க்கு –  பிறக்கின்றது. ஆகவே நாம் சூரிய பொங்கல் 5 மணிக்கு பொங்கல் பானை வைத்து 6, மணிக்கு சூரியன் உதயமாகின்ற நேரத்தில் படைக்கலாம். அன்று புதிதாக அறுத்துவரப்பட்ட புத்தரிசியை கொண்டும் விளைந்த புதுப் பொருட்களை வைத்து, விளைவித்து கொடுத்த பூமிக்கும், அது விளைய துணையாக இருந்த சூரிய பகவானுக்கும் ,பாடுபட்டு உழைத்து நம் கைக்கு கொண்டு வந்து சேர்த்த உழவர்களுக்கும்    நன்றி கூறி கொண்டாட வேண்டும்.

விறுவிறுப்பாகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு..! 

வீட்டு பொங்கல் வைக்கும் நேரம் :

வீட்டில் வைக்கும் பொங்கல் 6. 45 க்கு வைத்து 7. 30க்குள் சாமிக்கு  படைத்து விட வேண்டும். இதுவே இன்னும்  தாமதமாக செய்ய வேண்டும் என்றால் 9 மணிக்கு பானை வைத்து 10.30க்குள்  கொண்டாடிக் கொள்ளலாம். மதியம் வைக்கிறீர்கள் என்றால் 12 மணியிலிருந்து 2 மணி வரை வைத்து சாமிக்கு படையல் செய்யலாம்.

தவிர்க்க வேண்டிய நேரங்கள் :

காலை 7.30-  9 மணி, பிறகு 10:30 -12 இந்த இரண்டு நேரங்களில் பொங்கல் வைப்பதை தவிர்த்து விட வேண்டும்.

மாட்டுப் பொங்கல் : 

மாட்டுப் பொங்கலை மாடு உள்ளவர்கள் மட்டும் கொண்டாட வேண்டும் என்று இல்லை அனைவருமே கொண்டாடலாம். அன்று பொங்கல் வைக்க முடியாதவர்கள் ஏதேனும் மாட்டு சாலைகளுக்கு சென்று அதற்கு தீவனம் வாங்கிக் கொடுக்கலாம். அதுவும் செய்ய முடியவில்லை என்றால் அன்று கோவிலுக்குச் சென்று நந்தீஸ்வரரை வழிபாடு செய்யலாம். மேலும் அன்று முன்னோர்களுக்கு படையல் செய்ய உகந்த நாளாகும்.

மாட்டுப் பொங்கல் வைக்கும் நேரம் :

காலை 7.30 -8.30 வரை வைக்கலாம். சற்று தாமதமாக செய்ய வேண்டும் என்றால் 10:30 – 11:30 வரை கொண்டாடலாம்.

தவிர்க்க வேண்டிய நேரம் :

காலை 9-10.30  இந்த நேரத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.

காணும் பொங்கல் :

ஊரில் உள்ள அனைத்து பெண்களும் ஒரே இடத்தில் ஒன்று கூடி செய்யக்கூடிய பொங்கல் காணும் பொங்கல் என்றும் கன்னிப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது.அன்று உறவினர் வீடுகளுக்கு சென்று பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கலாம்  ஆகவே இந்த தை திருநாளை பொங்கல் வைத்து அனைவரும் தித்தி போடும் மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.