உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் இரங்கல்!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலம் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71.  இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இயக்குனர் பாரதி ராஜா, நடிகர்கள் விக்ரம், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

அந்த வகையில், பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியதாவது ” அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும் ,உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி ” என கூறியுள்ளார்.

விஜயகாந்த் மறைவு…சினிமா பிரபலங்கள் இரங்கல்!

மேலும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜயகாந்தை வைத்து ரமணா எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலை தெரிவித்ததோடு  ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் “ரமணா படம் உருவாவதற்கு முக்கிய காரணமே விஜயகாந்த் தான். அவர் கொடுத்த அந்த நம்பிக்கை தான் என்னை அந்த படத்தை முடித்து கொடுக்க உறுதுணையாக இருந்தது” எனவும் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.