தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் – விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்

களிர் கால்பந்து அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், சாதனை படைத்த மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகளுக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் உறுதி.

தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி, கடந்த 2018-ஆம் ஆண்டு ஒடிசாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் சமூக வலைதளங்களில், கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு ஊக்கத் தொகை உள்ளிட்ட அரசின் எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்ற தகவல் வைரலானது.

இதனையடுத்து விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள், மகளிர் கால்பந்து அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் சாதனை படைத்த மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகளுக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.