அடேங்கப்பா! ‘ஆப்பிள் 11 Pro’ வில் தவறாக இடம் பெற்ற லோகோ;அதனால் 2 லட்சத்துக்கு விற்பனை..!

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள நிறுவனமான ஆப்பிள்,அதன் 11 Pro மாடலில் லோகோவை வழக்கத்திற்கு மாறாக அச்சிட்டுள்ளது, இதனால் ஐபோன் 11ப்ரோவானது 2லட்சத்திற்கு விற்னையாகியுள்ளது.

பிற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் ஆப்பிள் வித்தியாசமான தோற்றம் மற்றும்  சிறந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது.இதன்காரணமாகவே மக்கள் ஆப்பிள் ஐபோன்களை மிகவும் விரும்பி வாங்குகின்றனர்.ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் மாடலிருந்து தற்போது உள்ள மாடல் வரை, அதன் கேமரா,பவர் பட்டன், ஸ்பீக்கர் மற்றும் லோகோ ஆகியவை மாறாத விஷயங்களாக இருக்கின்றன.இருப்பினும், சமீபத்தில் ஐபோன் 11pro தயாரிப்பில் நிறுவனம் ஒரு சிறிய தவறு செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 11 Pro தயாரிக்கும் போது, ஆப்பிள் லோகோவை போனின் பின்புறத்தின் நடுவில் அச்சிடுவதற்கு பதில் தவறுதலாக சற்று தள்ளி வலதுப்புறம் அச்சிட்டுள்ளது.மேலும்,ஐபோன் தயாரிக்கும்போது மில்லியனுக்கு ஒரு முறையே இத்தகைய சிறிய தவறுகள் நிகழும்,என நிறுவனம் தெரிவித்துள்ளது.இத்தகைய காரணத்தினால் ஐபோன் 11 Pro- வினை அதன் உண்மையான விலையைக் காட்டிலும்,சற்று அதிகமான விலைக்கு விற்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,ட்விட்டர் நிறுவனத்தின் இன்டர்னல் காப்பகமானது ஆப்பிள் தொடர்பான  தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆப்பிள் லோகோ தவறாக அச்சிடப்பட்ட இந்த ஐபோன் 11 Pro ஆனது 2,700 டாலரு(சுமார் 2.01 லட்சம் ரூபாய்)க்கு விற்கப்பட்டுள்ளது உறுதியாகிறது.

https://twitter.com/ArchiveInternal/status/1380511781131550722?s=20