பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேளுங்கள்.. எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்..!

கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றிருந்தார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைபடங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் தொடர்பாக மாலத்தீவு அதிபா் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 3 அமைச்சா்கள் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவை பற்றியும் சா்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டனா்.

இதைத் தொடா்ந்து, இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. சமீபத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அதிபா் முய்சு செய்தியாளர்களிடம் ஜனவரி 13 ஆம் தேதி பேசிய அவர் “மாலத்தீவு மீது அதிகாரம் செலுத்த எந்தவொரு நாட்டையும் அனுமதிக்கமாட்டோம்” என தெரிவித்தார்.

இவரின் இந்த கருத்து இந்தியாவை மறைமுகமாக தாக்குகிறார் என கூறப்பட்டது. இந்நிலையில், மாலத்தீவு ஜும்ஹூரி கட்சித் தலைவர் காசிம் இப்ராஹிம் கூறுகையில்” சீனப் பயணத்திற்குப் பிறகு தெரிவித்த கருத்துகள் குறித்து  மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களிடம் முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும்,  எந்தவொரு நாட்டைப் பற்றியும், குறிப்பாக அண்டை நாடு உறவைப் பாதிக்கும் வகையில் நாம் பேசக்கூடாது என தெரிவித்தார்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

மொத்தம் 87 உறுப்பினா்களைக் கொண்ட மாலத்தீவு நாடாளுமன்றத்தில் 56 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றால் அதிபரை பதவிநீக்கம் செய்யும் வகையில் அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி அதன் கூட்டணியில் உள்ள ஜனநாயகவாதிகள் கட்சியுடன் சேர்ந்து அதிபர் முய்சுவை பதவிநீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளன. மாலத்தீவு ஜனநாயக கட்சியின் 43 எம்.பி.க்கள் மற்றும் ஜனநாயகவாதிகள் கட்சியின் 13 எம்.பி.க்கள் என மொத்தம் 56 உறுப்பினா்களின் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாலத்தீவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாலத்தீவின் புதிய அதிபராக முகமது முய்சு பதவியேற்றார். அதன்பிறகு, இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. மாலத்தீவு எப்போதும் இந்தியாவின் நண்பன். ஆனால் சமீபத்தில் அங்கு அதிபராகப் பதவியேற்ற முகமது முய்சு-வின் கொள்கைகளால் இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முய்சு பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

 

author avatar
murugan

Leave a Comment