அமெரிக்காவில் இருந்து வாங்கிய அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்!! சிறப்பம்சங்கள் இதோ!

சமீபத்தில் அமெரிக்காவிடம் இந்தியா அப்பாச்சி AH64 ரக ஹெலிகாப்டர்களை வாங்கியுள்ளது. இந்த ஹெலிகாப்டரின் என்ஜின், பிளேடுகளை விமான தயாரிப்பில் சிறந்து விளங்கும் போயிங் நிறுவனம் ஆகும். இதில் இருவர் மட்டுமே செல்ல முடியும்.

Image result for boeing

ஒருவர் ஹெலிகாப்டரை ஒட்டவும், மற்றொருவர் ஆயுதங்களை இயக்கும் பணியில் இருப்பார். இந்த ஹெலிகாப்டர் மணிக்கு 263 கீ.மீ வேகத்தில் செல்லக்கூடியது. மேலும், 1200 குண்டுகளை தொடர்ந்து வீச கூடிய திறமை உள்ளது. பைலட் மற்றும் ஆயுதங்கள் இயக்குபவர் ஆகிய இருவரின் ஹெல்மெட்டிலும் பகலிலும், இரவிலும் குறிப்பார்த்து சுடுவதற்கு உதவும் தொலைநோக்கி அமைக்கப்பட்டது.

Image result for அப்பாச்சி AH64

மேலும், இலக்கை துல்லியமாக கண்காணிக்கும் வகையில், சென்சார் அமைக்கப்பட்டது. தரையிரக்கும் சக்கரங்களுக்கு நடுவே, துப்பாக்கி மற்றும் Hellfire ஏவுகணையை செலுத்துவதற்கான 4 ஏவுக்கருவிகள் உள்ளது. மேலும், இந்த ஹெலிகாப்டரை இயக்க குறைந்தது 2 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.