மாஸ்டர் படம் போன்ற ஒரு படம் பாலிவுட்டில் வரவேண்டும் – அனுராக் பாசு..!

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தை பார்க்க மக்கள் திரையரங்கிற்கு வருவது போல் பாலிவுட்டிலும் ஒரு திரைப்படம் வரவேண்டும் என்று அனுராக் பாசு தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் சினமா வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு படி படியாக கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்ததும் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. அதற்கு பிறகு விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படம் வெளியானது. இந்த படம் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகதஸ்தர்கள்  போன்றோருக்கு சிறப்பான லாபத்தை கொடுத்த படமாக அமைந்தது. படத்தை ரசிகர்கள் மட்டும் பார்த்து பாராட்டாமல் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், கிரிக்கெட் வீரர்களும் பாராட்டி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது பாலிவுட் இயக்குனரான அனுராக் பாசு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தை பார்க்க மக்கள் திரையரங்கிற்கு வருவது போல் பாலிவுட்டிலும் ஒரு திரைப்படம் வரவேண்டும். அப்போதுதான் இங்கும் மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என்று கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.