போதை பழக்கத்தை ஒழிக்க உறுதி மொழி.! கடும் நடவடிக்கை… தமிழக முதல்வர் உரை…

இன்று போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு விழா சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 

போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை வழிநடத்தி வருகிறார்.

போதை பொருளுக்கு எதிரான உறுதி மொழியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி தொடங்கி வைத்தார். பின்னனர் அவர் தனது உரையை தொடங்கினார்.

அதில், ‘ போதை பழக்கத்தால் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதனால், பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். போதையின் பாதை அழிவு பாதை. கொலை, கொள்ளை என பல்வேறு குற்ற செயல்களுக்கு போதை பழக்கம் தான் காரணம். அதனை விலை கொடுத்து வாங்கலாமா?

போதை பழக்கத்தால் பல்வேறு பிரச்சனை ஏற்படும். அதன் பாதை அழிவு பாதை. போதை பழக்க விழிப்புணர்வின் காவலர்களாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் செயல்பட வேண்டும். போதை பாதையை அடைப்பதும் எளிது. அவர்களை மீட்பது எளிது. அதனை சொல்ல வேண்டிய முறையும் எளிது தான்.’ என தனது பல்வேறு கருத்துக்கள் கூறி தனது உரையை முடித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment