பிக் பாஸ் பகுதி-3 ஒளிபரப்பாகும் தேதி வெளியானது!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.முதன் முதலில் 2017 ம் ஆண்டு பிக் பாஸ் வெளியான நிலையில்,2018 ம் ஆண்டு அதன் தொடர்ச்சியாக பகுதி-2 வெளியானது.

இந்த ஆண்டு பகுதி-3 தொடர்ந்து ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தொலைக்காட்சிகளில் வெளியான ப்ரோமோக்களும் அதிக அளவில் வரவேற்பை பெற்றன.இந்நிலையில், ஜூன் 23ம் தேதி முதல் பிக் பாஸ் பகுதி-3 நிகழ்ச்சியானது தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment