”அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை -அமைச்சர் கே.பி.அன்பழகன்

“அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை ” என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சூரப்பா மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் :

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.இது பெரும் சர்ச்சையாக மாறியது.மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியதாக சர்ச்சை எழுந்த நிலையில் இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கமளித்தார்.

சூரப்பா விளக்கம் :

அதில், அண்ணா பல்கலையின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை ஒப்புதலுடன் அறிக்கை தயாரிக்கப்பட்டது .என்னை போல மற்ற துணை வேந்தர்கள் யாரும் அரசை சந்தித்தது இல்லை.

அரசிடம் கேட்டே செயல்படுகிறேன்” எனவும் உயர்நிலை சிறப்புத் அந்தஸ்து கிடைத்தால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கும். இந்த நிதியின் மூலம் உள்கட்டமைப்பு, ஆய்வு கட்டமைப்பு வெளிநாட்டு பல்கலைக்கழகம் தொடர்பு போன்ற பல வாய்ப்புகள் ஏற்படும் என தெரிவித்தார்.

மற்றபடி இந்த உயர்நிலை சிறப்பு தகுதி காரணமாக பல்கலைகழகத்தில் நிர்வாக ரீதியான எந்த மாற்றமும் செய்யபடாது  என துணைவேந்தர் சூரப்பா விளக்கம் கொடுத்தார்.ஆனாலும் சூரப்பா தன்னிச்சையாக கடிதம் எழுதியது தொடர்பாக தமிழக அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

சிறப்பு அந்தஸ்து தேவையில்லை -அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் :

இந்நிலையில் இது குறித்து உயர் கல்வி அமைச்சர் கேபி அன்பழகன் கூறுகையில்,அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை.சிறப்பு அந்தஸ்துக்காக தமிழக அரசு எதையும் பறிகொடுக்க தயாராக இல்லை. நாம் ஏற்கனவே நல்ல நிலையில்தான் இருக்கிறோம், அதனால் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை.அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெற்றால் கல்விக் கட்டணம் அதிகரிக்கும். 69% இடஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடும்.தொடர்ந்து சூரப்பாவின் நடவடிக்கைகள் சரியில்லாமல் இருந்தால் ஆளுநரின் கவனத்திற்கு இவை எடுத்துச் செல்லப்படும். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் அளிக்கும் பதிலின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.