சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ்…!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ். 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன், நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment