வைரல் வீடியோ..! போட்டிக்கு முன் பெண் காவலருடன் நடனம் ஆடிய இந்திய வீராங்கனை.!

  • ஜெமிமா ரோட்ரிகஸ் இவர் நேற்றைய போட்டிக்கு முன் பெண் காவலருடன் பாலிவுட் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
  • அந்த வீடியோவை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

மகளிர்க்கான டி20 உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோதியது.

இதில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் இவர் நேற்றைய போட்டிக்கு முன் மைதானத்தின் பெண் காவலருடன் பாலிவுட் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. மேலும்அந்த வீடியோவை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இவரின் நடனதிற்கு  இந்திய வீரர் அஸ்வின் ,ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்பி ஆகியோர் பாராட்டி  உள்ளனர்.