வெடி விபத்து : உயிரழந்தோரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதி உதவி – பிரதமர் மோடி அறிவிப்பு

விருதுநகர் அருகே வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் எனும் கிராமத்தில் இயங்கி வரக்கூடிய  பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.இந்த வெடி விபத்தில் 12 பேர் உயிர் இழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தமிழகத்தின் விருதுநகர் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தம் அளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களைப் பற்றிக் கவலைப் படுகிறேன்.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ, களத்தில் அலுவலர்கள் பாடுபட்டு வருகிறார்கள்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி, காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.