சிறுமியை வன்கொடுமை செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை..!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்து உள்ள சேர்காடு பகுதியை சார்ந்த மோகன்தாஸ்

By murugan | Published: Nov 20, 2019 08:11 PM

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்து உள்ள சேர்காடு பகுதியை சார்ந்த மோகன்தாஸ் (60|) பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியர்.இவர் கடந்த 2017-ம் பக்கத்து வீட்டு 5 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைத்து பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். மேலும் வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது சொன்னால் கொலை செய்து விடுவதாக  மிரட்டியும் உள்ளார்.இதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் மோகன்தாஸை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.இந்த வழக்கில் வேலூர் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றம் மோகன்தாஸ்க்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும் , ரூ.6000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.இதை தொடர்ந்து மோகன்தாஸை வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
Step2: Place in ads Display sections

unicc