சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! டெல்லி வரை உணரப்பட்ட நில அதிர்வுகள்!

நேற்று (ஜனவரி 23) திங்கள்கிழமை இரவு சீனாவின் சின்ஜியாங்கின் தெற்கு பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் என்னென்ன என்பது குறித்த அந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ரிக்டர் அளவில் 7.2-ல் ஏற்பட்ட இந்த பயங்கரமான நிலநடுக்கம் தலைநகர் டெல்லி மற்றும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டது.

அயர்லாந்தை தாக்கிய இஷா புயல்: 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

இந்த நிலநடுக்கம் குறித்து தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் கொடுத்த தகவலின் படிசீனாவின் சின்ஜியாங்கினில் ஏற்பட்ட  நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம்  80 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும்” தகவலை தெரிவித்துள்ளது.

இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த பயங்கரமான நிலா அதிர்வால் டெல்லி மற்றும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகள் மற்றும் வீடுகளில் இருக்கும் பொருட்களும் அதிர்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி வீட்டின் வீதியில் தஞ்சம் அடைந்தனர். இதைப்போலவே, கடந்த ஜனவரி 11-ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் ரிக்டரி அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.