சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டத்திற்காக ₹65.34 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில்  நேற்று 2022-23- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை கொண்டுவரப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு முதன் முறையாக தமிழக அரசு சார்பில் வேளாண்துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது முறையாக தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான தனி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

கைபேசியால் இயக்கப்படும் பம்பு செட்டுகள்

முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டத்திற்காக 3,000 பம்பு செட்டுகளுக்கு ₹65.34 கோடி ஒதுக்கீடு என்றும், தென்னை, மா, கொய்யா, வாழை உள்ளிட்டவை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு 38,000 ஏக்கர் பரப்பளவில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.27.51 கோடி ஒதுக்கீடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.