‘அம்மா கோவிட்-19’ வீட்டுப் பராமரிப்பு திட்டம் - தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி

‘அம்மா கோவிட்-19’ வீட்டுப் பராமரிப்பு திட்டம் - தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி

‘அம்மா கோவிட்-19’ வீட்டுப் பராமரிப்பு திட்டத்தை தொடங்கிவைத்தார்  முதலமைச்சர் பழனிசாமி.

தமிழகத்தில் கொரோன பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று ‘அம்மா கோவிட்-19’ வீட்டுப் பராமரிப்பு  திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.இந்த திட்டத்தின்  நோக்கம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதாகும்.இதற்காக 20 பேர் கொண்ட மருத்துவக்குழு சுழற்சி முறையில் வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்கும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் இருக்கும் நபர்களுக்கு 14 முகக்கவசங்கள், வெப்பமானி,பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவி,கிருமி நாசினி,வைட்டமின் மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.

வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் ரூ.2500 செலுத்தி பயன்பெறலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர் காணொலி மூலமும், வாட்ஸ் அப் மூலமும் மருத்துவக் கண்காணிக்கப்படுவார்.இந்தியாவில்  வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க முதல் முறையாக  திட்டம் தொடங்குவது தமிழ்நாட்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

சாங் -5 சந்திர ஆய்வை துவங்க சீனா திட்டம் - புஜியான் மாகாணத்தின் தலைநகர் புஜோவில் மாநாடு!
ஸ்புட்னிக்-5 தடுப்பூசி சோதனைக்கு 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பம்.!
எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா
தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
இளைஞர் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட்.!
ஜே.என்.யு நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு.!
திமுக முன்னாள் எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் மறைவு - மு.க. ஸ்டாலின் இரங்கல்
15 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் இணையும் ஜிவி பிரகாஷ்...!
செல்வன் கொலை வழக்கு ! அதிமுகவின்  அனைத்து பொறுப்புகளில் இருந்து திருமணவேல் நீக்கம் - அதிமுக உத்தரவு
சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவதற்காக ரூ.200 கோடி கடன் தொகை - மத்திய பிரதேச முதல்வர்