அலசும் அமெரிக்கா உளவுத்துறை.! சீன ஆய்வகத்தில் உருவானதா கொரோனா.?

உஹான் ஆய்வகத்தின் வைரஸ் தொடர்பான பரிசோதனையின் போது கொரோனா வெளிப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா உளவுத்துறை சந்தேகப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அந்நாட்டு ஆய்வகத்தில் இருந்து உருவாக்கப்பட்டதா என்பது குறித்து அமெரிக்கா உளவுத்துறை விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் எப்படி உருவானதென்று இன்று வரை மர்மமாகவே இருந்து வருகிறது.

முதலில் உஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் அங்குள்ள மீன் சந்தையில் உருவாகவில்லை என்றும் அதற்கு மாறாக சீனா ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகப்பட்டு வருகிறது. உஹான் மருத்துவ ஆய்வகத்தின் வைரஸ் தொடர்பான பரிசோதனையின் போது கொரோனா வெளிப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகப்படுவதாகவும், அதனை உறுதிபட தெரிவிக்க ஆதாரங்கள் ஏதும் இல்லையென்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் குற்றம்சாட்டுகளை முற்றிலுமாக சீனா மறுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பிறப்பிடம் மற்றும் பரவல் முறையை மறைக்கவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆய்வகத்தின் மனிதனின் தவறால் கொரோனா உருவானது என்பதற்கு ஆதாரம் இல்லையென உலக சுகாதார அமைப்பு தெரிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் கொரோனா வைரஸ் உருவான விதம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தகுந்த ஆதாரங்களை நிரூபிக்கும் வரை சந்தேகங்கள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கும் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்