மக்கள் செத்தாலும் பரவாயில்லை….ஊரடங்கை நீக்கி பொருளாதாரத்தை மீட்பேன்….! – டிரம்ப் அதிரடி முடிவு

மக்கள் செத்தாலும் பரவாயில்லை, ஊரடங்கை நீக்கி பொருளாதாரத்தை மீட்பேன் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி முடிவு. 

சீனாவின் வுகான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனா பாதிப்பில் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டிய நிலையில் பலி எண்ணிக்கை 72 ஆயிரத்தை தாண்டியது. 

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஃபீனிக்ஸீல் உள்ள ஹனிவெல் மாஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்டுள்ளார். அப்போது பேசிய டிரம்ப் ” அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீண்டும் மீட்க எனக்கு ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது என்ற முடிவில் நான் உறுதியாக உள்ளேன். ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதன் மூலம் இன்னும் பல மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றார். இருப்பினும் நம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்க அனைவரும் வேலைக்கு வர வேண்டும்” என்றார். இவருடைய இந்த முடிவுக்கு பலர் விமர்சித்து வருகின்றனர். 

 

author avatar
Vidhusan