கடுமையான பனிப்புயலால் நிலைகுலைந்த அமெரிக்கா!

சமீபத்தில் வந்த புயலின் தாக்கம் ஓய்வதற்குள் புதிதாக அமெரிக்காவில் பனி புயல் தன் வேலையை காட்டியுள்ளது .
அமெரிக்காவை கடுமையான பனிப்புயல் புரட்டிப் போட்டு விட்டது. சுமார் ஏழு புள்ளி 8 அங்குலம் பனி மூடியுள்ளது.
பாம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளிப் புயல், அண்மைக்காலங்களில் இதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. இதனால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாஸ்டனில் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத வகையில் கடல் அலைகள் சீற்றம் காரணமாக அருகில் இருந்த சுரங்க ரயில் நிலையத்திற்குள் கடல் நீர் புகுந்தது. நியுஜெர்சியில் இருந்து வடக்கு கரோலினா வரை போடப்பட்ட தணணீர் குழாய்கள் உடைப்பெடுத்தன.இதனால் மக்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகினர் …
source: dinasuvadu.com

Leave a Comment