சீனா ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது ! – அமெரிக்க அதிபர் டிரம்ப்

சீனா ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில் முதலில் பாதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக முழுவதும் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் வனவிலங்கு சந்தையிலிருந்து பரவியது என சீனா கூறுகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது.  இதுகுறித்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து தான் பரவியுள்ளது என சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், வாஷிங்டனில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் “சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதாக கூறும் உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா ?” என்று அதிபர் டிரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப் ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. ஆனால் அந்த ஆதாரங்களை தற்போது வெளியிட முடியாது என்று கூறியுள்ளார்.

author avatar
Vidhusan