அம்புலன்ஸ் வர தாமதம்! தாயின் உடலை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற அவலம்!

தாயின் உடலை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற அவலம். தேனி

By leena | Published: Aug 01, 2020 09:54 PM

தாயின் உடலை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற அவலம்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கூடலூர் பகுதியில் வசிக்கும் மூதாட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்னர், வயிற்றுப்போக்கு காரணமாக அருகே உள்ள கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய மூதாட்டியை, இரு தினங்களுக்கு முன்னர், அவரை தொடர்புகொண்ட சுகாதாரத்துறையினர், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறியுள்ளனர். மேலும், வீட்டில் தனிமைப்படுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று மூதாட்டி உயிரிழந்த நிலையில், அக்கம் பக்கத்தினர், விரைவாக உடலை அக்கம் செய்ய அறிவுறுத்தியுள்ளனர். நகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சுமார் 12 மணி நேரம் கடந்தும் ஆம்புலன்ஸ் வராததால், அக்கம் பக்கத்தினர் கொடுத்த அழுத்தம் காரணமாக, வேறு வழியின்றி, மூதாட்டியின் உடலை, தள்ளுவண்டியில் வைத்து, கூடலூர் மயானத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்த செயல் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc