10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய Amazon திட்டம்!

இந்த வாரம் முதல் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய Amazon திட்டம்.

கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்ப வேலையில் உள்ள சுமார் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய Amazon திட்டமிட்டுள்ளது. அதுவும், இந்த வாரம் முதல் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய Amazon திட்டமிட்டுள்ளது என இந்த விஷயத்தை அறிந்தவர்களை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அமேசானின் சாதன அமைப்பு, மனிதவள பிரிவு, சில்லறை விற்பனை பிரிவுகளில் ஊழியர்களை நீக்க அமேசான் முடிவு செய்துள்ளது. மூலதன மதிப்பு சரிந்ததால் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது அமேசான் நிறுவனம். பணவீக்கம் மற்றும் சந்தையில் நிலவும் மந்த நிலையால், செலவுகளை குறைக்கும் விதமாக இம்முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களில் ட்விட்டர், மெட்டா போன்ற நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வரிசையில் தற்போது, ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கும் அமேசான் நிறுவனம். அமேசான் வரலாற்றில் இது மிகப்பெரிய பணிநீக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment