நாளை முதல் பதிவுத்துறை செயல்பட அனுமதி.!

கொரோனா தாக்கம் உலக நாடுகளை மிரட்டி வருவதால் பல நாடுகள் ஊரடங்கு பிறப்பித்துள்ளது.இதையெடுத்து இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்த நிலையில் , மீண்டும் மேலும் 14 நாள்கள் ஊரடங்கை நீட்டித்து பிரமர் மோடி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் நாளை முதல் சில துறைகளில் ஊரடங்கு  தளர்த்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.இதனால் பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை முதல் செயல்படத் துவங்கும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் , அலுவலகங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும், அனைத்து  பணியாளர்களும் முகக் கவசம் அணிந்து  பணிகளை செய்ய வேண்டும்.
பொதுமக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து தான் அலுவலகத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். ஒரு மணிநேரத்திற்கு 4 டோக்கன் வீதம்  ஒரு நாளைக்கு 24 டோக்கன்கள் வரை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

author avatar
murugan