சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி! 60 பேர் வரை பணியாற்றலாம் - முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சின்னத்திரை படப்பிடிப்பு 60 பேரை

By leena | Published: May 30, 2020 10:27 AM

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சின்னத்திரை படப்பிடிப்பு 60 பேரை வைத்து நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம்  முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதனையடுத்து, ஊரடங்கு உத்தரவால், சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு சமீபத்தில், சின்னத்திரை படப்பிடிப்பை 20 பேரை வைத்து நடத்தலாம் என அறிவித்திருந்த நிலையில், இதற்கு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் 20 பேரை மட்டும் மட்டும் படப்பிடிப்பு நடத்துவது சாத்தியமற்றது என தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, பெப்சி தலைவர் செல்வமணி 40 பேரை வைத்து சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சின்னத்திரை படப்பிடிப்பு 60 பேரை வைத்து நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து படப்பிடிப்பு பணிகள் முழுவேகத்துடன் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Step2: Place in ads Display sections

unicc