விஜய்யை விட குறைவான சம்பளம் வாங்கிய அஜித்…? வெளியான ஷாக்கிங் சீக்ரெட்.!

நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் ஆகிய இருவருக்கும் இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இவர்களது படங்கள் வெளியானால் வசூல் ரீதியாக, பல சாதனைகளை படைத்துவிடும். அந்த அளவிற்கு இவர்களுக்கு மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது.

Thunivu Vs Varisu
Thunivu Vs Varisu Image Source Twitter

இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில்  நண்பர்கள் என்றாலும் கூட, சினிமாவில் இருவருக்கும் போட்டி இருக்கும். ஆம், இவர்களது படங்கள் வெளியானால் யாருடைய படம் அதிகம் வசூல் செய்யும், யார் மாஸ் என்ற பெரிய எதிர்பார்ப்பே எழுந்துவிடும். அந்த வகையில், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படமும், துணிவு திரைப்படமும் வெளியாகிறது.

Vijay And Ajith
Vijay And Ajith Image Source Twitter

மேலும், இப்படி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இவர்கள் இருவரும் ஒரு படத்தில் நடிப்பதற்கு பல கோடிகள் சம்பளம் வாங்குவது என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். இதில் யார் தற்போது அதிகமாக வாங்குகிறார் என்ற கிசு கிசு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்களேன்- வசூலில் சருகிய விஷாலின் ‘லத்தி ‘…! இதுவரை எத்தனை கோடிகள் தெரியுமா..?

Vijay And Ajith
Vijay And Ajith Image Source Twitter

அதன்படி, நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் நடித்ததற்காக சம்பளமாக 100லிருந்து 120 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக சினிமா வட்டாரத்தில் சொல்கிறார்கள். இவரை போல, நடிகர் அஜித் துணிவு படத்துக்காக 70 கோடி மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளாராம். இதன் மூலம், அஜித்தை விட விஜய் தான் அதிக சம்பளம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment