கொரோனா அச்சுறுத்தலால் ஏப்ரல் 30 வரை ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா விமான சேவை!

கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருவதையடுத்து, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள், விமானங்கள் மற்றும் இரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், விமான சேவை நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின்  ஊழியர்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். மேலும், இவர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட அளவு பிடித்தம் செய்துள்ளனர். இதனையடுத்து, ஏர் இந்தியா ஏப்ரல் 30-ம் தேதி வரை இந்தியாவில் தங்களது விமான முன்பதிவை நிறுத்தியுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.