விமானங்களை விற்க ஏர் ஏசியா நிறுவனம் உடன்படிக்கை!

இப்போது பயன்படுத்தி வரும் 182 விமானங்களை ஏர் ஏசியா நிறுவனம் 120 கோடி டாலருக்கு விற்பனை செய்ய உடன்பாட்டை எட்டியுள்ளது.

ஆசியாவில் பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் ஏசியா தனது கடன் சுமையைக் குறைப்பதற்காக இப்போது பயன்பாட்டில் உள்ள 182 ஏர்பஸ் விமானங்களை விற்க முடிவு செய்துள்ளது. இதற்காக பிபிஏஎம்(bbam) நிறுவனத்துடன் பேச்சு நடத்தி  120 கோடி டாலருக்கு விற்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் ஏர் ஏசியாவின் துணை நிறுவனங்கள் மூலம் 98 விமானங்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளது. ஏர் ஏசியாவின் இந்தப் புத்தாக்க நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பால் அந்த நிறுவனத்தின் பங்கு விலை 5 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment