கொரோனாவுக்கு உயிரிழந்த அதிமுக ஒன்றிய செயலாளர் வரதராஜ்.!

அதிமுக ஒன்றிய செயலாளர் வரதராஜ் கொரோனாவுக்கு உயிரிழப்பு.  

கொரோனா தொற்றால் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நடிகர் நடிகைகள் உட்பட பலர் பாதிக்கப்பட்டு சிலர் மீண்டும் சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

அந்த வகையில், அதிமுக ஒன்றிய செயலாளரும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமைபட்டி ஊராட்சி ஒன்றியத்தின் தலைவருமான வரதராஜ் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.