வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசிடிவி கேமரா பொருத்த அதிமுக கோரிக்கை!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் முறைகேடு நடப்பதாக மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் பாபு முருகவேல் புகார் மனு.

வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடைபெற வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக வழக்கறிஞர் அணி பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் வெளி நபர்கள் அனுமதிக்க கூடாது என்றும் அதிமுக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த மனுவில், 2ம் கட்ட வாக்குப் பதிவில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டுகள் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு மையங்களில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ள நிலையில், வாக்குப் பெட்டிகள் வைக்கும் மையங்களை மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்து, 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனிடையே, 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை 60.34% வாக்குகள் பதிவாகியுள்ளன.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்