ஆஹா! வெந்தயத்தை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நிச்சயம் கட்டுக்குள் வருமாம்.!

நம் அனைவரது சமையலறையிலும் சர்க்கரை உள்ளதோ இல்லையோ ஆனால் அனைவரது இல்லங்களிலும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நிச்சயம் இருப்பார்கள் அந்த அளவுக்கு சர்க்கரை நோய் பரவி விட்டது. இந்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

நம் தென்னிந்திய உணவுகளில் வெந்தயம் நீங்கா இடம் பிடித்துள்ளது. பல ஆய்வுகளின் அறிக்கையில் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும், குறைக்கவும் வெந்தயம் முக்கிய பங்காற்றுகிறது என கூறுகிறது.

வெந்தயத்தின் பயன்கள்:

வெந்தயத்தில் கரையும் நார் சத்துக்கள் அதிகம் உள்ளது, இது செரிமானத்தின் போது கார்போஹைட்ரேட் ஜீரணமாகி சர்க்கரை ரத்தத்தில் சர்க்கரையாக மாறாமல் உறுஞ்சி  குறைக்கும் வேலையை செய்கிறது. அதாவது உட்கொள்ளும் கார்போஹைட்ரேட் உணவை நேரடியாக ரத்தத்தில் கலக்க விடாமல் செய்கிறது.

வெந்தயத்தை பயன்படுத்தும் முறை:

ஒரு நாள் ஒன்றுக்கு இரண்டு ஸ்பூன் வெந்தயம் பயன்படுத்திக் கொள்ளலாம் அதாவது 10- 15 கிராம் அளவாகும்.ஒரு நாளைக்கு காலை மாலை உணவுக்கு முன் எடுத்துக் கொள்ளவும்.

  • ஒரு ஸ்பூன் வெந்தயத்தை அப்படியே விழுங்கி விடவும். இது மிக எளிமையான முறையாகும்.
  • வெந்தயத்தை வறுத்து பொடி செய்தும் குடித்து வரலாம்.
  • வெந்தயத்தை முளைகட்டி எடுத்துக் கொண்டால் மிக மிக சிறப்பு, அதன் இரட்டிப்பான பலனை பெற முடியும்.

உணவுக்கு 15 நிமிடத்திற்கு முன்புதான் வெந்தயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். வெந்தயத்தை எடுத்துக்கொண்ட பிறகு 15 நிமிடத்தையும் தாண்டி உணவை எடுத்துக் கொண்டால் அதன் முழு பலனையும் பெற முடியாது.

அதிக அளவு மாத்திரை எடுத்துக் கொண்டவர்களுக்கு இரைப்பையில் உள்ள உள் சுவரில் புண் ஏற்பட்டிருக்கும் அந்தப் புண்ணை  ஆற்றும் தன்மையை கொண்டுள்ளது. மேலும் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது .தொடர்ந்து வெந்தயம் எடுத்துக் கொண்டால் மன அழுத்தம் நீங்கி நல்ல தூக்கத்தையும் கொடுக்கும் என கூறப்படுகிறது.மேலை நாடுகளில் ஒரு நாளுக்கு 20 கிராம் அளவு வெந்தயம் பயன்படுத்துகிறார்கள் என ஆய்வில் கூறப்படுகிறது.

தவிர்க்க வேண்டியவர்கள்:

குளிர்ச்சியான உடல் கொண்டவர்கள், சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள், அலர்ஜி உள்ளவர்கள் தவிர்க்கவும்.

ஆகவே நம் ஆரோக்கியம் மருந்து மாத்திரைகளால் அல்லாமல் உணவுடன் ஒன்றியதாக இருக்க வேண்டும் இதுவே நம் மன நலத்திற்கும் உடல் நலத்திற்கும் மிக நல்லது.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment