இலங்கையில்  கொழும்பு அருகே புகோடாவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிறன்று (ஏப்ரல் 21 ஆம் தேதி) இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில்  பலர்  உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல்  காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று  இலங்கையில்  கொழும்பு அருகே புகோடாவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.