ஜப்பான் பல்கலைக்கழக நிர்வாகம், ஜப்பானில் புகைப்பிடிப்பவர்கள் பேராசிரியராக முடியாது என்று புதிய சட்டம் விதித்துள்ளது. 2020-ம் ஆண்டில் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜப்பானில் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனை வளாகங்களில் புகைப்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் யூசுகே தாகுகுரா இது குறித்து கூறுகையில், புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்கள் கல்வித்துறைக்கு பொருத்தமானவர்கள் இல்லை. நாகசாகி பல்கலைக்கழகத்தை புகைப்பிடிப்பவர்கள் இல்லாத பல்கலைக்கழகமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் புகைப்பிடிக்கும் பழக்கும் உடைய நபர்களை பேராசிரியர்களாக பணியமர்த்த மாட்டோம் என நாகசாகி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. புகைபிடிக்கும் பழக்கம் உடையவர்கள், பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் முன், புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி விடுவேன் என உறுதிமொழி அளித்த பின்பே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.