ஜெயலலிதா மறைவுக்குபின் யார் வேண்டுமானாலும் ஆட்சியை நடத்தி இருக்கலாம்.! டிடிவி தினகரன் கருத்து.!

ஜெயலலிதா மறைவுக்குபின் யார் வேண்டுமானாலும் ஆட்சியை நடத்தி இருக்கலாம். இதில் எந்த பெருமையும் இல்லை. டி.டி.வி.தினகரன் விமர்சனம். 

இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்75வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுகவினர், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் தரப்பினர் என பலரும் ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அம்மாவின் தொண்டர்கள் : ஜெயலலிதா பிறந்தநாளன்று இன்று டிடிவி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுகவை எதிர்க்க அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும். என குறிப்பிட்டார்.

பெருமை இல்லை : மேலும், நாம் அனைவரும் ஓரணியில் இணைந்து செயல்பட்டால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெல்ல முடியும். எனவும், குறிப்பிட்டு, ஜெயலலிதா மறைவுக்குபின் யார் வேண்டுமானாலும் ஆட்சியை நடத்தி இருக்கலாம். இதில் எந்த பெருமையும் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றதை குறித்து பேசினார் தினகரன்.

இரண்டிலும் தோல்வி : அடுத்ததாக, இரட்டை இலை சின்னம் மட்டும் இருந்தும் கடந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் என இரண்டிலும் அதிமுக தோல்வியைதான் அடைந்தது எனவும் டிடிவி.தினகரன் குறிப்பிட்டு பேசினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment