கியூபாவில் முதல்முறையாக பிடல் காஸ்ட்ரோவிற்கு பிறகு பிரதமராக மானுவல் மார்ரீரோ நியமனம்!

  • கியூபாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம் அதிபரின் பணிசுமையை குறைக்க வகை இருந்தது.
  • இதை தொடர்ந்து தற்போது கியூபா நாட்டின் பிரதமராக  சுற்றுலா அமைச்சர் மானுவல் மார்ரீரோ க்ரூசை நியமிக்கப்பட்டு உள்ளார்.

அமெரிக்காவின் அண்டை நாடான கியூபா  கரீபியன் கடலில் அமைந்துள்ளது. 90 வருடங்களாக அமெரிக்காவை எதிர்த்து கியூபா வந்துள்ளது. அமெரிக்காவை விட 90 மடங்கு சிறிதாக உள்ள கியூபா எப்படி அமெரிக்காவை எதிர்க்க முடிந்தது என பலர் பலர் ஆச்சரியமாக பார்த்தாலும் அதற்கு முக்கிய காரணம் பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா.

புரட்சியாளர் சேகுவேராவுடன் இணைந்து புரட்சியை நடத்தி 1959-ம் ஆண்டு கியூபாவில் பிரதமராக  ஃபிடல் காஸ்ட்ரோ பொறுப்பேற்றார். பின்னர் 1976-ம் ஆண்டு கியூபாவின் அதிபராகவும் பதவியேற்றார்.இந்நிலையில் ஃபிடல் காஸ்ட்ரோ கடந்த 2008-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக தனது பதவியை இளைய சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம்  ஒப்படைத்தார்.

ரவுல் காஸ்ட்ரோ தொடர்ந்து 10 வருடங்களாக அதிபராக இருந்தார். 87 வயதான ரவுல் பதவியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்தார்.இதை தொடர்ந்து துணை அதிபரான இருந்த மிக்வெல் டயாஸ், அதிபர் பதவிக்கு வேட்பாளராக நின்றார். அவரை எதிர்த்து யாரும் வேட்பாளராக நிற்காததால் கடந்த ஏப்ரல் மாதம்  மிக்வெல் டயாஸ் கனல் போட்டியின்றி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1976-ம் ஆண்டு வரை கியூபாவின் பிரதமராக பிடல் காஸ்ட்ரோ இருந்தார். அதன் பின் பிரதமராக யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் கியூபாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அந்த சட்டம்  அதிபரின் பணிசுமையை குறைக்க வகை இருந்தது.இதை தொடர்ந்து தற்போது கியூபா நாட்டின் பிரதமராக  சுற்றுலா அமைச்சர் மானுவல் மார்ரீரோ க்ரூசை நியமிக்கப்பட்டு உள்ளார்.

author avatar
murugan