சச்சின் வழங்கிய பேட் வைத்துதான் அஃப்ரிதி உலக சாதனை படைத்ததார்..!

வக்கார் யூனிஸ் வழங்கிய பேட் மூலம் அஃப்ரிதி உலக சாதனை படைத்தார். ஆனால், வகார் யூனிஸ்க்கு அந்த பேட்டை சச்சின் டெண்டுல்கர் பரிசாக வழங்கியிருந்தார் என்று கூறியுள்ளார்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி 40 வயதான இவர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மேலும் சமீபத்தில் கொரோனா தொற்று குணமாகி வீடு திரும்பினார்,இந்த நிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் சதம் விளாசி 18 வருடங்களாக அந்த சாதனையை இவர் தக்கவைத்திருந்தார்.

மேலும் கடந்த 2014ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் கோரி ஆண்டர்சன் 36 பந்துகளில் சதம் கடந்து அஃப்ரிதியின் சாதனையை முறியடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதுகுறித்து இணைய நிகழ்ச்சி ஒன்றில் அசார் மேக்மூத் கூறியது வக்கார் யூனிஸ் வழங்கிய பேட் மூலம் அஃப்ரிதி உலக சாதனை படைத்தார். ஆனால், வகார் யூனிஸ்க்கு அந்த பேட்டை சச்சின் டெண்டுல்கர் பரிசாக வழங்கியிருந்தார் என்று கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.