150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி !தொடர்ந்து 5 போட்டியில் தோல்வியை தழுவிய ஆப்கானிஸ்தான்!

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது.இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.போட்டி டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ், ஜேம்ஸ் வின்ஸ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து நிதானமாக விளையாடிய ஜேம்ஸ் வின்ஸ்  3 பவுண்டரி அடித்து 26 ரன்கள் எடுத்து 9.3 ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் , ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் கூட்டணி இணைந்து  அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.ஜானி பேர்ஸ்டோவ் 8 பவுண்டரி , 3 சிக்ஸர் விளாசி 90 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அடுத்ததாக இறங்கிய மோர்கன் , ஜோ ரூட் இருவரும் கடைசிவரை அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை குவித்தனர்.இறுதியாக 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டை இழந்து 397 ரன்கள் குவித்தது.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மோர்கன் 148 ரன்கள் விளாசினார்.
ஆப்கானிஸ்தான் அணியில் குல்படின் நாயப் ,தவ்லத் சத்ரான் தலா  3 விக்கெட்டை பறித்தனர். 398 ரன்கள் இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக நூர் அலி சத்ரான்,குல்படின் நாயப் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடக்கத்திலே நூர் அலி சத்ரான் ரன்கள் அடுக்கமால் வெளியேறினர். பின்னர் இறங்கிய ரஹ்மத் ஷா ,குல்படின் நாயப் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ரன்களை சேர்த்தனர். குல்படின் நாயப் 11.5ஓவரில்  37 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அடுத்தடுத்து களமிறங்கிய ஹஷ்மதுல்லா ஷாஹிடி 76,அஸ்கர் ஆப்கான் 44,முகமது நபி 9 ரன்களுடன் வெளியேறினார்.இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில்8 விக்கெட்டை இழந்து 247 ரன்கள் எடுத்து 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து அணி பந்து வீச்சில் ஆதில் ரஷீத் , ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா  3 விக்கெட்டையும் ,மார்க் வூட் 2 விக்கெட்டையும் பறித்தனர்.மேலும் ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய ஐந்து போட்டியிலும் தொடர்ந்து தோல்வியை தழுவி உள்ளது.
 
 
 

author avatar
murugan