Aditya-L1 Mission: ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தம்..! இஸ்ரோ அறிவிப்பு.!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து, சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் இன்று காலை சரியாக 11.50 மணியளவில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

ஆதித்யா எல்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் புதிய அத்தியாயத்தை படைத்துள்ளது. ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் உட்பட அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆதித்யா-எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து சரியாக 648 கி.மீ உயரத்தில் பிரிக்கப்பட்டு, புவியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது, 2,298 கி.மீ உயரத்தில் இருந்து ஆதித்யா-எல்1 விண்கலம் தனித்து தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.

இது குறித்து கூறிய இஸ்ரோ, ” PSLV-C57 மூலம் ஆதித்யா-எல்1 ஏவுதல் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. பிஎஸ்எல்வி ராக்கெட் செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளது. இந்தியாவின் முதல் சூரிய ஆய்வகம் சூரியன்-பூமி L1 புள்ளி இலக்கை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.