இவர்களுக்கு உரிய இழப்பீடு தொகையினை விரைந்து வழங்க வேண்டும் – விஜயகாந்த்

மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கும்,வாழைகளுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு தொகையினை விரைந்து வழங்க வேண்டும் என விஜயகாந்த் அறிவுறுத்தல். 

தமிழகத்தில் மழை மற்றும் சூறாவளி காற்றால் சேதம் அடைந்த வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்  என்றும், கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்த விவசாயிகளுக்கு தற்போது கடன் சுமை
மேலும் அதிகரித்துள்ளது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்த விவசாயிகளுக்கு தற்போது கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளது.கடன் சுமையில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கும்,வாழைகளுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு தொகையினை விரைந்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.