அதானி குழும முதலீட்டாளர்களுக்கு 2 நாளில் 4.20 லட்சம் கோடி இழப்ப.!

பங்குச்சந்தையில் தொடர் சரிவு காரணமாக அதானி குழுமத்தின் முதலீட்டாளர்களுக்கு கடந்த 2 நாட்களில் மட்டும் 4.20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த, ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்திய தொழிலதிபரும், உலக பணக்காரர் ஆன அதானிக்கு சொந்தமான நிறுவனங்கள் பங்கு சந்தையை தவறாக கையாள்கிறது எனவும், கணக்குகளில் முறைகேடு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தது.

இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி பங்குகள் பங்கு சந்தையில் பெரும் சரிவை சந்தித்துள்ளன. கடந்த 2 நாட்களில் அதானி பங்குகளின் விலை 2 லட்சத்து 37ஆயிரம் கோடி ரூபாய் சரிந்துள்ளது என நேற்று தகவல் வெளியாகி இருந்தது.

தற்போது அதானி குழுமத்திற்கு மேலும் ஓர் அதிர்ச்சி செய்தியாக அதானி குழுமத்தின் முதலீட்டாளர்களுக்கு கடந்த 2 நாட்களில் மட்டும் 4.20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு
இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், உலக பணக்காரர் வரிசையில் 3ஆம் இடத்தில் இருந்த தொழிலதிபர் அதானி தற்போது 7வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

அதானி நிறுவனம் தொடர் பங்கு வெளியீட்டின் மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட அதானி குழுமம் தீர்மானித்து இருந்தது. ஜனவரி 27 (நேற்று) முதல் ஜனவரி 31 வரையில் இந்த தொடர் பங்கு விற்பனையில் ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே, அதானி தரப்பு ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை பற்றி கூறுகையில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் போலியாக தங்கள் மீது குற்றம் சுமத்தி அதன் மூலம் ஆதாயம் தேட முயற்சி செய்து வருகிறது. மேலும், அந்த ஆய்வு நிறுவனம் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதானி குழுமம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment