கமல்ஹாசனை பார்த்தாலே நடுங்கும் பிரபல நடிகை! அப்படி என்ன செஞ்சிட்டாரு உலகநாயகன்?

Kamal Haasan தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணமாக திகழும் நடிகர் என்றால் கமல்ஹாசன் என்று கூறலாம். அந்த அளவிற்கு எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிடுவார் என்றே சொல்லலாம். எனவே, கமல்ஹாசனுடன் நடிக்கும் பல நடிகர்களும் அவருடைய நடிப்பை பார்த்து வியந்து போய் அவரை பாராட்டி பேட்டிகளில் பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

read more- இளைஞர்களை கொண்டாட வைத்த ‘பிரேமலு’! ஓடிடிக்கு எப்போது வருகிறது தெரியுமா? 

அந்த வகையில் மெட்டி ஒலி, வாணி ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சாந்தி வில்லியம்ஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல்ஹாசன் குறித்து பேசியுள்ளார். கமல்ஹாசன் குறித்து அவர் பேட்டியில் பேசியதாவது ” எனக்கு 11 வயதாக இருந்த போதில் இருந்தே கமல்ஹாசன் சாரை நன்றாகவே தெரியும்.

READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்!

அந்த வயதில் இருந்தே அவரை பார்த்தாலே எனக்கு ரொம்பவே பயம். அப்போதெல்லாம் பார்க்கும்போதே என்னடி  என்று என்னை மிரட்டுவார். அவருடன் கடைசியாக பாபநாசம் படத்தில் ஒன்றாக நடித்தேன். அப்போது அவரை பார்த்து நான் மாஸ்டர் ஜி என்று பயத்துடன் பேசினேன். நான் பயந்ததை பார்த்த அவர் இன்னும் என்னடி பயம் என்று கேட்டார்.

உனக்கும் வயதாகி விட்டது எனக்கும் வயதாகிவிட்டது இன்னும் எதற்காக மாஸ்டர் ஜி என்று கூறுகிறாய் என்றும் கேட்டார்.  நான் அதற்கு உங்களை நான் சிறிய வயதில் இருந்தே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். எனவே எப்போதும் நீங்கள் எனக்கு மாஸ்டர் தான் நான் மாஸ்டர் ஜி என்று தான் கூறுவேன் என்று கூறினேன். உடனே அவர் கௌதமியிடம் இங்க பாரு அவள் என்னை மாஸ்டர் ஜி என்று எவ்வளவு மரியாதையாக அழைக்கிறாள் என்று கூறினார்.

read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?

என்னை பற்றி கமல்ஹாசன் சாருக்கு எல்லாமே தெரியும். இன்னும் அவரை அவரை பார்த்தால் எனக்கு பயம் தான்” எனவும் சாந்தி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், சாந்தி வில்லியம்ஸ் நெஞ்சத்தை கிள்ளாதே, பார்த்திபன் கனவு, கஜ்ஜால குற்றம், அந்நியன், யுவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment