நடிகர் கோபாலகிருஷ்ணன் உடல்நல பாதிப்பால் காலமானார்.!

  • 2009ம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் மூலம் அறிமுகமான கோபாலகிருஷ்ணன் உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். 

2009ம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் மூலம் அறிமுகமான கோபாலகிருஷ்ணன் சசிக்குமாருக்கு மாமன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். அரசு வேலைக் கிடைத்தால் தான் தனது பெண்ணை திருமணம் செய்து தருவேன் என்று பிடிவாதமாக இருக்கும் அவரது கதாப்பாத்திரம் பேசும்படியாக இருந்தது.

அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த கோபாலகிருஷ்ணன் சமீபத்தில் வெளியாகிய நாடோடி 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இறுதி சடங்குகள் சொந்த ஊரான குப்பகவுண்டன்பாளையத்தில் நடைபெற்றன.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்