காட்டுமிராண்டி தனமாக கர்ப்பிணி யானையை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : முதல்வர் பினராயி விஜயன்

கர்ப்பிணி யானையை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேரள மாநிலத்தில், கர்ப்பமான காட்டு யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்ததால், அந்த யானைக்கு அங்குள்ள சிலர், அன்னாசிபழத்தில் வெடிமருந்தை வைத்து உணவாக அளித்துள்ளனர். இதனையடுத்து, இது யானையில் வாயில் வெடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இதனை உட்கொண்ட யானை, ஆறு ஒன்றில் நின்றபடி உயிரிழந்துள்ளது. மனிதாபிமானமற்ற முறையில், யானையை கொன்ற காட்டுமிராண்டிகளுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகிற நிலையில்,  ட்விட்டரில் RIP HUMANITY என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

இதனையடுத்து, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், கர்ப்பிணி யானையை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகள் மீது வனத்துறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு விரைவில் கைது செய்யப்படுவர் எனவும் உறுதி கூறியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.