உலக மக்கள் தொகையில் 10% பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் – இயக்குநர் மைக்கேல் ரையான்

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து  பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும்  உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைமையகமான ஜெனீவாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய, உலக சுகாதார அமைப்பின் அவசர திட்ட செயல் இயக்குநர் மைக்கேல் ரையான், ‘எங்களது கணிப்பின்படி உலக மக்கள் தொகையில் 10  சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று’ ஏற்பட்டிருக்கலாம் என  கூறியுள்ளார்.

உலகில் மொத்த மக்கள் தொகை 760  கோடி. இதில் 76 கோடி பேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கின்றனர். ஆனால், தற்போதைய கணக்கின்படி, உலகம் முழுவதும் இதுவரை 3 கோடியே 55 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.