உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா..! பாஜகவில் இணையவுள்ளதாக அறிவிப்பு

Abhijit: கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்த அபிஜித் கங்கோபாத்யாய, பாஜக கட்சியில் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் 7ஆம் தேதி பாஜகவில் அதிகாரபூர்வமாக இணையவுள்ளதாக தெரிவித்திருக்கிறார். உயர்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2018ஆம் ஆண்டு அபிஜித் கங்ககோபாத்யாய (62) பொறுப்பேற்றார்.

அவர் ஓய்வு பெற இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு இன்று ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அபிஜித் கங்கோபாத்யாய, “7ஆம் தேதி பாஜகவில் இணைகிறேன். கட்சியில் இணைந்த பிறகு மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படும்.

Read More – எம்ஜிஆர் – ஜெயலலிதா படத்தை வைத்து தேர்தல் பரப்புரை செய்த பாஜக பிரமுகர்கள் சஸ்பெண்ட்

திரிணாமூல் காங்கிரஸ் போன்ற குற்றவாளிகள் நிறைந்த கட்சிக்கு எதிராக போராடுவது பாஜக மட்டுமே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நான் சேர்ந்திருக்கலாம், ஆனால் எனக்கு சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளது, ஆனால் அக்கட்சிக்கு சனாதனம் மீது நம்பிக்கை கிடையாது” என கூறியுள்ளார்.

Leave a Comment